கோவை, மார்ச் 19-
சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்ய கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ள ரோபோக்களை தமிழகத்திலும் அறிமுகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோவையில் திங்களன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசு, பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்கு புதிய ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய ரோபாக்களை தமிழக அரசும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஆ.நாகராஜன், பெருமாவளவன், ஆனந்தன், வீரவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply