திருப்பூர், மார்ச் 19 –
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் கிறிஸ்துவர்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ மதவெறியர்களை கைது செய்து, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி உடுமலைபேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் உடுமலைபேட்டை பேருந்து நிலையம் முன்பாக திங்களன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஎஸ்ஐ தேவாலத்தைச் சேர்ந்த பாஸ்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். உடுமலை பகுதி சிறுபான்மை மக்கள் நலக்குழு செயலாளர் லால் துவக்கி வைத்துப் பேசினார். சிறுபான்மை நலக்குழு தலைவர் முகமது அலி, இணைச் செயலாளர் சாம் பட்தர் ஜான், பாஸ்டர் கிறிஸ்டோபர், ரெவரண்ட் ராஜாமணி, ரெவரண்ட் பால்சுந்தர் சிங், சகோதரி பாலம்மாள், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வை.ஆனந்தன் ஆகியோர் மத்திய ஆளும் பாஜகவின் மததுவேஷத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகளைக் கண்டித்து உரையாற்றினர். மேலும், உலமாக்கள் சபை பொருளாளர் யூசப், ஜாமியா மஜீத் தலைமை ஷேக் இமாம் அப்துல்லா அன்வாரி, முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் சண்முகவேல், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் உள்பட முற்போக்கு அமைப்புகள், பல்வேறு மதவழி சிறுபான்மை அமைப்புகள் உள்பட ஆயிரத்தித்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: