நாமக்கல், மார்ச் 18-
நாமக்கல் அருகே லத்துவாடியில் நூலகத்தை திறக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 200க்கும் மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 2009- 2010 ஆம் ஆண்டு ரூ.3.67 லட்சம் நிதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நூலகம் அமைக்கப்பட்டது. இதில் அறிவியல், வரலாறு, கதைகள், நாவல்கள், கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்களை பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படித்து வந்தனார். இந்த நூலகம் திறக்கப்பட்ட சில மாதங்கள் மட்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நூலகம் முறையாக திறக்கப்பட்டாமல் உள்ளது. இதனால் நுலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்க முடியாமல் வாசகர்கள் மிகவும் சிறமத்திற்குள்ளாகின்றனர். எனவே நூலகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- லத்துவாடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் நூலகம் கட்டி திறக்கப்பட்டது. சில மாதங்கள் முறையாக மக்கள் பயன்பாடிற்கு திறக்கப்பட்ட நூலகம் தற்போது மாதத்தில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாணவர்கள் புத்தகங்களை படிக்க முடியாத நிலையுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை முறையாக திறக்க வேண்டும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: