ஈரோடு, மார்ச் 18-
நந்தா கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழாவினை சிறப்பிக்கும் வகையில் அதன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நூலகத் துறை சார்பில் தேசிய நூலக வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவினை மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.ஸ்டாலின் குணசேகரன் துவக்கி வைத்தார். நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி. சண்முகன் வாழ்த்தி பேசுகையில், அகத்தை தூய்மை செய்து புறத்தையும் புதுப்பிக்கவல்ல ஆயுதம் புத்தகம் மட்டுமே என்றும், ஓர் நூலகம் மனிதனை, ஓர் சாமானியனை ஓர் சாதனையாளராகவும் சான்றோனாகவும் மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தது. அதுபோல புத்தகங்களின் மூலம் கடந்த கால வரலாற்றினையும், தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

இதில் மாணவ, மாணவியர்கள் பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் அந்தந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் நூலகத்துறையின் மூலம் நடத்தப்பட்டன. இவற்றில் மொத்தமாக 1871 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 201 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: