ப.பாளையம், மார்ச் 18-
கூலி உயர்வு கேட்டு பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் சிஜடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் ஒடப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு 75 சதவீதம் கூலி உயர்வு தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சனியன்று ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை செயலாளர் ஜெயவேல் தலைமை வகித்தார். விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் துவக்கவுரை ஆற்றினார். விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட பொருளாளர் கே.மோகன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். விசைத்தறி சங்கத்தின் ஒன்றிய துணை செயலாளர் ஜெயவேல் நன்றி தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.