ஈரோடு, மார்ச் 18-
பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் கொண்டு செல்லப்படும் சரக்குகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பில் தொகைக்கும் மேல் உள்ள சரக்குகளுக்கு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இ.வே பில் கட்டாயம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளதைத் திரும்பப்பெற வேண்டுமென ஈரோடு பவர்லூம் கிளாத் மெர்ச்சண்ட் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தினர் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது, பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் கொண்டு செல்லப்படும் சரக்குகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பில் தொகைக்கும் மேல் உள்ள சரக்குகளுக்கு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இ.வே பில் கட்டாயம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தலைவர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதன் காரணமாக ஜாப் ஓர்க் முறையில் தொழில் புரிவோர் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுவதுடன் அம்முறைத் தொழிலே நலிந்து போகும் நிலை ஏற்படும். மேலும், இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், இ.வே பில் அறிவிப்பிலிருந்து ஜாப் ஒர்க் முறை தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் முறையால் ஏற்படக்கூடிய பல்வேறு சிரமங்களையும் இந்த அறிவிப்பால் அரசுக்கு எந்த பயனும் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி நிர்வாகம் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இக்கோரிக்கையை மத்திய அரசிடம் மாநில அரசும் வலியுறுத்த வேண்டுமென அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.