காஞ்சிபுரம்
மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகத்தை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கொளப்பாக்கத்தை அடைந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.