திருவனந்தபுரம்:
தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி உடைந்து சிதறத்
தொடங்கியுள்ள நிலையில் கேரளத்திலும் அது பிரதிபலித்துள்ளது. கேரள மாநில
என்டிஏ ஒருங்கிணைப்பாளரான துஷார் வெள்ளாப்பள்ளி தனது கட்சியான பிடி ஜேஎஸ் செங்ஙன்னூர் இடைத்தேர்தலில் பாஜகவை ஆதரிக்காது என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்த 40 ஆண்டுகளாக பாஜகவைச் சேர்ந்த சாமி
யார்களின் பிடியில் இருந்து வந்த கோரக் பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்
தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. இதுபோல் அம்மாநிலத்தில் உள்ள
பில்பூர், பீகார் மாநிலத்தில் அராரியா நாடாளுமன்ற தொகுதிகளிலும் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.பாஜக ஆட்சி நடக்கும் உபியிலும், மக்கள் தீர்ப்புக்கு மாறாக ஆர்ஜேடியை கழட்டி விட்டு பாஜக கூட்டணிக்குள் இணைந்து கொண்ட ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரிலும் பாஜகவுக்கு மக்கள் அளித்துள்ள தோல்வி தேசிய ஜனநாயக கூட்டணியை கலகலக்கச் செய்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புத்தகுதி அளிப்பதாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராத பாஜகவை உதறித்தள்ளியிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. பாஜகவுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கியிருக்கின்றன. 

கேரள மாநில என்டிஏ ஒருங் கிணைப்பாளர் துஷார் வெள்ளாப்பள்ளி. பாஜகவுக்கு வலுவில்லாத கேரளத்தில் துஷார் வெள்ளாப்பள்ளியின் பிடிஜேஎஸ் கட்சியை நம்பியிருக்கும் நிலையே உள்ளது. இந்நிலையில் நடைபெற உள்ள செங்ஙன்னூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் தனது கட்சி பாஜக வேட்பாளருக்கு ஆதர வளிக்காது என துஷார் அறிவித்துள்ளார். ஆதிவாசி கோத்ரமகாசபைத் தலைவர் சி.கே.ஜானவிக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கூட்டணியில் தக்க வைத்துள்ளனர்.

இது தவிர பி.சி.தாமஸ் போன்ற அணிகள் ஏதுமற்ற சிறிய அமைப்புகளின் ஆதரவு மட்டுமே பாஜகவுக்கு உள்ளது. மத்தி்யில் ஆளும் பாஜக தாராளமாக பணமும், பதவிகளும் வழங்கும் என்கிற நம்பிக்கையில் இவர்கள் பாஜகவுக்கு பக்கபலமாக உள்ளனர். ஆனால், உ.பி, பீகார் இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசை நிலைநிறுத்த பாஜக திணறுகையில் கேரள அரசியலில் தற்போது தலையிட வாய்ப்பில்லாததே கூட்டணியினரின் அவநம்பிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது.
சாதி-மத சக்திகளையும், சில சிறிய குழுக்களையும் வைத்துக்கொண்டு கேரளத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி யை (என்டிஏ) பாஜக உருவாக்கியது. இதில் பிடிஜேஎஸ் மட்டுமே அறிமுகமுள்ள கட்சியாக உள்ளது. செங்ஙன்னூரில் 2011இல் பாஜக 5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. 2016இல் பிடிஜே எஸ் ஆதரவால் 30 சதவீதம் வாக்கு களை பெற முடிந்தது. ஆனால் 2 ஆண்டு களில் பாஜகவுக்கு உதவிய முந்தைய சூழ்நிலைகள் தலைகீழாக மாறியிருக்கின்றன. தற்போது பிடிஜேஎஸ் ஆதரவை விலக்கியிருப்பதும் இந்த பின்னணியில் தான்.

Leave A Reply

%d bloggers like this: