புதுதில்லி:
பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அரசியல் தலைமைக்குழு அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை களில் புதுதில்லியில், மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் நடைபெற்றது. பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இடைத்தேர்தல் முடிவுகள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற மக்களவைக்கான இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பது ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்
போக்காகும்.உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளில் போட்டியிட்ட சமா ஜ்வாதிக் கட்சி வேட்பாளர்களுக்கும், பீகாரில் அராரியா தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா

தள வேட்பாளருக்கும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்திருந்தன. பாஜகவை நிராகரித்திருப்பதற்காக வாக்காளர்களை அரசியல் தலைமைக் குழு வாழ்த்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெகனானா பாத் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வேட்பாளருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு
ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்
என்கிற பிரச்சனை தொடர்பாக அர சாங்கம் அளித்த உறுதிமொழியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும், தெலுங்கு தேசமும் முன்மொழிந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்
முழு ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த உறுதிமொழிக்கு அரசாங்கம் துரோகம் செய்திருப்பது ஏற்கமுடியாததாகும். அனைத்துத் துறைகளிலும் இந்த அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதும், நாடாளுமன்றத்திற்கு இந்த அரசு பதில் சொல்வதிலிருந்து நழுவப் பார்ப்பதும் இத் தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது தோலுரித்துக் காட்டப்படும்.இத்தீர்மானத்தை முன்மொழி வதற்காக, தேவைப்படும் மக்களவை உறுப்பினர்களில் பத்து சதவீதத்தினருக்கும் அதிகமான வர்கள் எழுந்துநின்ற போதிலும், மக்க
ளவைத் தலைவர் அவை கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறி மக்களவையை ஒத்திவைத்திருக் கிறார். ஆனால் அதே சமயத்தில்,அதே மக்களவை, அவையில் விவாதம் எதுவும் மேற்கொள்ளா
மலேயே நாட்டின் ஒருமுகப் படுத்தப்பட்ட நிதியத்திலிருந்து (Consolidated Fund of India)
பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை எடுப்ப தற்கு அரசாங்கத்திற்கு அனுமதி
அளிக்கும் விதத்தில் நிதிச்சட்ட முன்வடிவைநிறைவேற்றி இருக் கிறது. நாடாளுமன்றத்தை நடத்து வதில் பாஜகவின் இரட்டை நிலை யும் அதன் ஜனநாயக விரோத குணமும் கண்டிக்கத்தக்கன.

அரசியல் ஸ்தாபன அறிக்கை
2018 ஏப்ரல் 18 – 22 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் தாக்கல் செய்யப்பட வுள்ள வரைவு அரசியல் – ஸ்தாபன
அறிக்கையை அரசியல் தலைமைக் குழு விவாதித்தது. இது, மார்ச் 28 – 30 தேதிகளில் நடைபெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு, அங்கே நிறைவேறிய
பின்னர் அகில இந்திய மாநாட்டில் தாக்கல் செய்யப்படும்.

Leave A Reply

%d bloggers like this: