சேலம்:
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட
வேண்டும் என டி.கே.ரங்கராஜன் எம்.பி.,வலியுறுத்தினார்.தமிழகத்தின் அடையாளமாக திகழும் சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் மற்றும் சிஐடியு மாநிலத் தலைவர்அ.சவுந்தரராசன் ஆகியோர் இரும்பாலை
யில் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக டி.கே.ரங்கராஜன் எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது  அவர் கூறுகையில்,  மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அதை அனுமதிக்கமுடியாது. அம்பானிக்கும் அதானிக்கும் ஆதரவாகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.