கோவில்பட்டி:
சாதிச்சான்றிதழ் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்புப் போராட்டம் அதி காலை வரை அதிகாரிகளும் காத்திருந்து சான்று வழங்கும் வரை நீடித்தது.கோவில்பட்டி கோட்ட த்தில் கோவில்பட்டி, கழுகு மலை, வானரமுட்டி, நாலாட்
டின்புதூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் காட்டு நாயக்கன் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்க கோரி பலமுறை விண்ணப்பித்தும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திய பின்னரும், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகும்,சான்றிதழ் வழங்கப்பட வில்லை. சான்றிதழ் கிடைக்கா மல் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ –மாணவிகள் சான்றிதழ் இல்லா மல் எவ்வித சலுகையும் பெற முடியாமல், வேலைவாய்ப்புக்கும், உயர் கல்விக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

உடனடியாக சாதிச்சான்றி தழ் வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ –மாணவிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் அனிதா மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் உடன்பாடு ஏற்படவில்லை. சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தினை கைவிட போவதில்லை என்று கூறி தொடர்ந்து அதிகாலை வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையெடுத்து மீண்டும் கோட்டாட்சியர் அனிதா, டிஎஸ்பி ஜெபராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்டமாக 7 பேருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கினர். மேலும் விண்ணப்
பம் செய்தவர்கள் மனுக்கள் மீது ஆய்வு செய்து தகுதியுள்ள வர்களுக்கு விரைந்து வழங்கப்
படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தினை வெள்ளிக் கிழமை அதிகாலையில் கைவிட்டனர்

இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி. டில்லிபாபு, சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன், ஒன்றியச் செயலாளர்ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் சக்தி வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு, கயத்தாறு ஒன்றியச் செயலாளர் சாலமன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: