புதுதில்லி,

பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் குறைந்தபட்ச சராசரி மாத வைப்புத்தொகையை பராமரிக்காததன் காரணமாக 41.16 லட்சம் வங்கி சேமிப்பு கணக்குகளை ரத்து செய்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி குறைந்தபட்ச சராசரி மாத வைப்புத்தொகைக்கான கட்டணத்தில் 70 சதவீதத்தை பாரத் ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.(இரண்டாவது முறையாக).

ஜன்ந்தன் கணக்குகளுக்கும், சிறார்களுக்கான கணக்குகளுக்கும், ஓய்வூதியர்களின் கணக்குகளுக்கும் மற்றும் அரசு மானியத்திட்டம் பெறுபவர்களின் கணக்குகளுக்கும் சராசரி மாத வைப்புத் தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுத்தரமக்கள் நிரந்தர வைப்புத் தொகை பராமரிக்க இயலாமல் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த சந்திரசேகர் கார்க் என்பவர் தகவலறியும் உரிமைச்சட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சராசரி மாத வைத்துத் தொகை பராமரிக்காதவர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதில் பெறப்பட்ட தகவலின்படி, ஏப்ரல்1, 2017 முதல் ஜனவரி31, 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும்
குறைந்தபட்ச சராசரி மாத வைப்புத்தொகையை கடைப்பிடிக்கத் தவறிய 41.16 லட்சம் கணக்குகள் மூடப்பட்டுள்ளது என பாரத் ஸ்டேட் வங்கி பதிலளித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.