சார் ! என்ன சார் ! திடீர்னு ஒருத்தர் திராவிடநாடுங்கிறார் .. என்னொருத்தர் தனித்தமிழ்நாடுங்கிறார்ன்னு பதறிக்கேட்டார் நண்பர் .

நான் சொன்னேன் காவிகள் தொடர்ந்து ஆட்டம் போட்டால் இந்தியா 56 துண்டுகளாய் மீண்டும் சிதறினாலும் ஆச்சரியப்பட மாட்டேன் ! இதை அந்த 56 இஞ்சுக்கு சொல்லுங்கோ !

இந்தியா ஒற்றை நாடல்ல .பல மாநிலங்களின் ஒன்றியம் .உபகண்டம் .பலமொழி ,பல இனம் ,பல பண்பாடு ,பல்வேறு தட்பவெப்பம் கொண்ட நாடு இதனை மறந்து ஒரு மொழி – ஒரு மதம்- ஒரு பண்பாடு -ஒரு தேசம் என காவிகள் கொக்கரிப்பு அதிகமாக அதிகமாக பிரிவினை மனோநிலை அதிகரிக்கவே செய்யும் .

மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட பறிக்கப்பட தேசபக்தி அதிகரிக்காது ; எரிச்சலும் வெறுப்பும் கோபமுமே மேலோங்கும் .

நீட் எதற்கு ? ஆதார் எதற்கு ? மாநிலங்களை மிதிக்கும் எதேச்சதிகாரம் எதற்கு ? மொழி ,பண்பாடு திணிப்பு எதற்கு ?

மாநிலங்களிடையே பாரபட்சம் எதற்கு ? மாநில மக்கள் விரும்பாத திட்டங்கள் எதற்கு ?

குஜராத் பனியாக்களும் பிராமணிய மேலாதிக்கமுமே இலக்கென செயல்படும் இந்துத்துவவெறி இந்தியாவுக்கு பேராபத்து என்பதை தேசம் இப்போதேனும் உணர்ந்தால் விடிவு .இல்லையேல் பேரழிவு நிச்சயம் .

Su Po Agathiyalingam

Leave a Reply

You must be logged in to post a comment.