ஹசின் ஜகான் தனது முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷமி கூறியதாவது ,”என்னுடன் திருமண வாழ்வைத் தொடங்கும் முன்னரே 2014-ஆம் ஆண்டு ஹசின் ஜகானுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி 2 மகள் உள்ளனர்.தொடக்கத்தில் தன்னுடைய 2 மகள்களையும் தனது சகோதரியின் மகள்கள் என்றே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.திருமணமான சில நாட்களுக்குப் பிறகே ஹசின் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் 2 பெண் குழந்தைகளின் தாய் என்பதும் தெரியவந்தது. ஹசின் தன் மீது தவற்றை வைத்துக்கொண்டு என்னை மிரட்டி வருகிறார்.நான் ஹசினுடன் சமாதானமாக செல்லவே விரும்புகிறேன்.என்னுடைய மகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன்” என்று ஷமி தெரிவித்துள்ளார்

Leave A Reply

%d bloggers like this: