தமிழக சட்டமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட பட்ஜெட், மாற்றுத் திறனாளிகளின் சட்ட உரிமைகளை மதிக்காத பட்ஜெட் என்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு: மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி மத்திய மாநில அரசுகள் தனி நிதியம் உருவாக்க வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உருவாக்க உள்ள நிதியத் திற்கு வெறும் 10 கோடி இந்த பட் ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, யானை பசிக்கு சோளப் பொரி போடுவதாகவே உள்ளது. அதேபோல, புதிய சட்டப்படி அரசு மற்றும் பொதுக் கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் தடையில்லா சூழலுடன் உருவாக்க வேண்டிய தமிழக அரசு, அவற்றைப் பற்றியெல்லாம் வாய் திறக்க மறுக்கிறது.தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தப் போவதாக ஏற்கெனவே பல ஆண்டுகளாக அரசுகள் தெரிவித்து வந்துள்ளன. ஆனால், அதற்குத் தேவையான நிதி ஒருபோதும் ஒதுக்கியதில்லை. தற்போதும் அப்படிஒரு அறிவிப்பை வெளியிட்டுள் ளதே தவிர, நிதி ஏதும் ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 435 சிறப்புப் பள்ளிகள் அனைத்தையும் ஏதோ தமிழக அரசு நேரடியாக நடத்துவதுபோல நிதி நிலை அறிக்கையில் தெரிவித்திருப்பது தவறானது. பார்வையற்றோர், காதுகேளாதோருக்கு மாநிலம் முழுவதும் சுமார் 25 சிறப்புப் பள்ளிகளை மட்டுமே அரசு நேரடியாக நடத்துகிறது. மனவளர்ச்சிக் குன்றிய குழந் தைகளுக்காக ஒரு மையம் மட்டுமே அரசு நேரடியாக நடத்துகிறது. மற்றவைகள் அனைத்தும் தனியார் தொண்டு நிறுவனங்கள்தான் நடத்துகின்றன. அவர்களுக்கு உறுதியான, நிரந்தரமான எந்த உதவியும் தமிழக அரசு செய்யவில்லை என்பதே உண்மை.

எனவே, தவறான தகவல்களை பட்ஜெட் அறிக்கையில் தந்து தமிழக அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது.பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 1.59 லட்சம் கோடி என்றபோதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆண்டைவிட பெயரளவிற்கு ஒரு சில திட்டங்களுக்கு ஒன்றிரண்டு கோடி ரூபாய்களை மட்டும் உயர்த்தி வழங்கிவிட்டு மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் வகையிலேயே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: