கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தே.புடையூரில் அமைக்கப் பட்டு வரும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலையின் கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், விருத்தாசலம் வட்டச் செயலாளர் என்.எஸ். அசேகன், கடலூர் நகரச் செயலாளர் ஆர். அமர்நாத் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அப்போது அவர்கள் கொடுத்த மனுவின் விவரம் வருமாறு:-

வேப்பூர் வட்டம் தே.புடையூர் கிராமத்தில் 4 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் அருகில் செயல்பட்டு வரும் ஏ.சித்தூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவு நீர், நச்சுப் புகையால் விலை நிலங்கள் விவசாயத்திற்கு பயன்படாமல் பாதிக்கப் பட்டு வருகிறது. ஆலையின் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசாக்கி உள்ளது.இந்நிலையில் பாண்டிச் சேரி சாலிடு மேனேஜ்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் மருத்துவக் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து அதனை எரியூட்டுவதற்கான ஆலை கட்டுமான பணிகள் தே.புடை யூர் கிராமத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலை செயல் பாட்டுக்கு வந்தால் அந்த கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நீர் பிடிப்புள்ள குளம், குட்டை, ஏரிகள் பாதிக்கப்படும்.நீராதாரம் பாதிக்கப்பட்டால் கால்நடைகளையும், விவசாயத்தையும் நம்பி இருக்கக்கூடிய அந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும்பாதிக்கப்படும். இந்த தொழிற் சாலையால் நுறையீரல் பாதிப்பு,புற்று நோய், சிறுநீரக கோளாறு, மலட்டுத் தண்மை உள்ளிட்ட நேய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. அந்த கிராமத்தைச் சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் இதே பாதிப்பு ஏற்படும்.

எனவே இந்த தொழிற் சாலைக்கு வழங்கப் பட்டுள்ள அங்கிகாரத்தை ரத்து செய்து, அந்த ஆலையின் கட்டுமாணப் பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை பாதுகாக்கஅரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.