திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 48 மணி நேரத்திற்குள் அங்கு நிறுவப்பட்டிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. அதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா தனது முகநூலில் “ திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்து தமிழகத்தில் உடைக்கப்பட வேண்டியது ஈ.வெ.ரா.வின் சிலை’’ என்று விஷம் கக்கியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல் வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி பிரதான சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் 25 ஆண்டுகாலமாக உள்ள பெரியாரின் சிலையை பாஜகவைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் சேதப்படுத்தினார். திருவொற்றியூர் பெரியார் நகரில் அமைக்கப்பட்டிருந்த அம் பேத்கர் சிலை மீது கடந்த மார்ச் 8ஆம் தேதி மர்ம நபர் கள் சிலர் சிவப்பு பெயிண்டை ஊற்றினர்.

சிலைகளுக்கு காவி நிறத் துணி

இந்நிலையில் நாமக்கல் பிரதான சாலையில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் திடீரென காவி நிறத் துணியை போர்த்தி, மாலை அணிவித்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் கூறுகையில், நாமக்கல்லில் பெரியார் சிலைக்கு காவி நிறத் துணி போர்த்தப்பட்டது மனவேதனை அளிக்கிறது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீப காலமாக தமிழகத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக் கும் வகையில் செயல்படுவோர் மீதும், வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.