ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, வியாழக்கிழமையன்றே நோட்டீஸ் அளித்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி வெள்ளிக்கிழமையன்று நோட்டீஸ் அளித்தது. மோடி அரசு திங்கட்கிழமையன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படும் போது, அதனை ஆதரிக்கும் விதமாக குறைந்தது 50 எம்.பி.க்கள் எழுந்து நிற்க வேண்டும். ஆனால், மக்களவையில் வெள்ளிக்கிழமையன்றும் அமளி ஏற்பட்ட நிலையில், அவை முறையாக நடக்கவில்லை; எழுந்து நிற்கும் எம்.பி.க்களை எண்ணமுடியவில்லை என்று கூறி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் கொடுத்த நோட்டீஸை எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்து விட்டார்.

இதனால், திங்களன்று நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.