சமூகவலைத்தளங்களில் உண்மையை விட பொய்களே வேகமாக பரவுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஒரு புதிய ஆய்வில் சமூகவலைத்தளமான டுவிட்டரில் பொய்யான தகவல்கள் உண்மையான தகவல்களைவிட மிகவேகமாக பரவுவது தெரிய வந்திருக்கிறது.
“தி ஸ்பெரெட் ஆப் டுரு அண்டு ஃபால்ஸ் நியூஸ் ஆன்லைன்” என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வு ‘அறிவியல்’ இதழில் வெளியாகியிருந்தது. இதில் தவறான தகவல்கள் உண்மையான தகவல்களைவிட 70% மிகவேகமாக பரவுவதாக கண்டுபிடித்துள்ளனர். ஒரு பொய்யான தகவல் 1500 ஆட்களை அடைய ஆகும் காலத்தைப்போல் ஒரு உண்மைத்தகவல் பரவ 6 மடங்கு நேரம் அதிகம் எடுப்பதாகவும் ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

தகவல் பரிமாற்றங்களை ஆராய்ந்ததில் பொய்யான தகவல்கள் இடையூறு இல்லாத சங்கிலியாகவும், 10லிருந்து 20மடங்கு அதிவேகமாகவும் பகிரப்பட்டுள்ளன. பொய்யான தகவல்களில் முதல் 1% பகிர்வுகள் 1000 லிருந்து 1,00,000 நபர்களுக்கு இடையே நடந்துள்ளது. ஆனால், உண்மையான தகவல்கள் வெறும் 1000 என்ற எண்ணிக்கைக்கு உள்ளாகவே பகிரப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் 4.5 மில்லியன் பதிவுகளை 3 மில்லியன் நபர்களிடம் 2006 லிருந்து 2017 வரையான காலகட்டத்தில் பகிரபட்டதிலிருந்து எடுத்து உண்மை,பொய் மற்றும் கலவை என 3 பிரிவுகளில் ஆராய்ந்தனர். இதில் மூன்றில் இரு பங்கு தவறு என்ற பிரிவிலும், 5 ல் ஒரு பங்கு மட்டுமே சரி என்ற பிரிவிலும் மற்றவை கலவையிலும் INQUIRER.NET என்ற இணையதளம் கொண்டு கண்டறிந்தனர். ஆராய்ச்சியாளர்கள் பகிர்வுகளை சரியா அல்லது தவறா என ஆராய மொத்தம் 6 வகையான இணையதளங்களை பயன்படுத்தி இருக்கின்றனர்.
ஆய்வில் இருந்த ஊடகம் மற்றும் கலை துறையின் பேராசிரியரான தேப் ராய் ”ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்தும் திகைத்தும் உள்ளனர். சமூகவலைத்தளங்களில் வரும் பகிர்வுகளை உறுதி செய்த பின்னரே நம்பவும்,பகிரவும் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.”

Leave a Reply

You must be logged in to post a comment.