அப்பொழுது அவனுக்குவயது 21. இயற்கையின் புதிர்களை விடுவிக்க ஆய்வு செய்வது. இயற்கையின் நியதிகளை கண்டு பாமரர்களும் புரியும் வகையில் விளக்குவது இவைகளே அவனது இலட்சியங்களாகும்.
அந்த இளம் வயதில் அவனது கால்கள் தடுமாறி விழத் தொடங்கின. மருத்துவ நிபுணர்கள் தோள் தசையின் துணுக்கை எடுத்து நோய்முதலை ஆய்வு செய்த பொழுது எலும்புக் கூட்டை இயக்கும் தசைகளின் சில நரம்புகளின் நியுரான்கள் மெல்ல சாகின்றன என்று கண்டனர்.
இந்த அபூர்வ நோயின் பெயர் அமியோட்ரோபிக் லாட்டரல் செக்லிரோசிஸ் (ஏ.எல்.எஸ்) இதற்கு மருந்தில்லை. இவனுக்கு சில குறிப்பிட்ட நரம்புகளே செயலிழப்பதால் ஆயுள் இரண்டு வருடங்களை தாண்டினால் ஆச்சரியப் பட வேண்டிய ஒன்று ஆனால் தொட்டியில் வளரும் செடி போல் கவணமான பராமரிப்பு அவசியம் என்றனர்.
இப்படி ஒரு குழந்தை இங்கே பிறந்திருந்தால் போன ஜெனமத்து பாவமாக கருதி பெற்றோர்கள் கோவில் கோவில்களாக சென்று தெய்வங்களை வேண்டுவர் அல்லது பிச்சை யெடுக்க பயன்படுத்திவிடுவர்.
அந்த இளைஞன் மருத்துவரின் தீர்ப்பை ஏற்க வில்லை. சில விட்டமின்களை குடல் ஜீரணிக்க மறுப்பதால் சில நரம்பின் சில நியுரான்கள் அழிவதாக அறிந்து கொண்டான். தொட்டியில் வளரும் செடி போல் வாழ நேர்ந்தாலும் மீதமுள்ள நரம்பால் மூளையை இயக்குவேன் சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பேன் ஒவ்வொரு நரம்பும் சாக சாக மீதமுள்ள நரம்பால் இயங்க புதிய வழி கண்டுபிடிப்பேன் என்று உறுதி பூண்டான். அந்த உறுதியோடு 77 வயது வரை வாழ்ந்து சாதனை படைத்தான்
தனது 27வது வயதில் மென் தசைகள் தவிற மற்ற இயக்க தசைகள் எதுவும் செயல்படாத நிலை வந்தது. உறங்குகிற நேரம் தவிற சக்கர நாற்காலியிலே வாழத் தள்ளப்பட்டான் ஒரு கட்டத்தில் நிமோனியா காய்ச்சலால் அவதி உற்ற பொழுது மூச்சுதிணரலை தவிற்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் குரலையும் இழந்தான் .
மத நம்பிக்கைகளை ஓரம்கட்டி அறிவியல் தொழில்நுட்பங்களை பேணும் பண்பாடு பரவிய பிரிட்டனிலே பிறந்த தால் அவன் லட்சியத்தை அடைய உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் உதவின. அதன் மூலம் பிரபஞ்சத்தை பற்றிய கோட்பாடுகளை ஆய்வு செய்தான் அதனை பாமரர்களும் புரியும் வகையில் எழுதினான். மாணவர்கள் மனதிலே இடம் பிடித்த பேராசிரியரானான். ஐன்ஸ்டீனைப் போல் இவனும் பாமர மக்களின் நெஞ்சங்களிலே இடம் பெற்றான் . கடைசியாக கன்னத்தில் உள்ள தசைகள் தவிர மற்ற தசைகளும் ஒத்துழைக்க மறுத்து போது அந்த தசைகளை அசைத்து கம்ப்யூட்டர் மூலம் கணீர் குரலில் சொற் பொழிவு ஆற்றியது அவனது உறுதிக்கு சான்றாய் நின்றது.
சக ஆய்வாளர்களின் சிந்தனையை வென்றான் . சில ஆய்வுகளின் முடிவு இப்படித்தான் இருக்கு மென்று சக ஆய்வாளர்களோடு பந்தயம் கட்டுவான் விஞ்ஞானத்தை நகைச்சுவை த தும்ப எழுதுவதிலும் பேசுவதிலும் அவன் வல்லவனாக திகழ்ந்தான். விண் வெளிப்பயணத்தில் ஈர்ப்பு சக்தியற்ற நிலையில் இயங்க நடத்தும் சோதனையில் சோதனை பொருளாக சென்றான் . 2010ல் இவன் எழுதிய “ஒப்பற்ற கட்டமைப்பு” ( The Grand design) என்ற புத்தகம் பிரபஞ்சம் பற்றி விஞ்ஞான கோட்பாடுகளை வரலாற்று பொருள்முதல் வாத அடிப்படையில் விளக்கியது அதில் மத த்திற்கும் ஆய்விற்கு உட்பட்டு மாறும் அறிவியல் கோட்பாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை நகைச் சுவை ததும்ப எழுதினார்.
“1277ம் ஆண்டில் அன்றைய போப்பாண்டவர் கட்டளைப்படி தெய்வ நிந்தனையாக கருதப்படும் 219 குற்றங்களை பட்டியலிடப்பட்டது அதில் இயற்கை நியதிகளை சார்ந்து இயங்குகிறது என்பது கடவுளின் வல்லமையை மறுப்பதால் அந்த கருத்து தெய்வகுற்றமாகும் என்று பட்டியலில் இருந்தது . இது வெளிவந்த சில மாதங்களில் போப்பாண்டவர் வசித்த அரண்மையின் மேல் கூரை விழுந்து போப்பாண்டவரே மாண்டார். மேற் கூரை ஆண்டவன் சொல்லை மதிக்காமல் புவி ஈர்ப்பு நியதியை பின்பற்றியதால் அவர் சாக நேர்ந்தது” ( தி கிரான்ட் டிசைன்)
ஸ்டீபன் ஹாகிங்கின் தத்துவம் இயக்க இயல் பொருள்முதல் வாதம் ஆகும் அவரது அரசியல் விஞ்ஞான சோசலிசம் ஆகும். அவரது இலக்கு பாமரனுக்கு அறிவியலை போதிப்பது ஆகும். பிரபஞ்சம் பற்றியும் கருந்துளை பற்றியும் இவர் கொடுத்த விளக்கத்திறகாக ஏன் நோபிள் பரிசு வழங்கவில்லை?இதற்கு இவரது பதிலைவிட நோபிள் பரிசு பெற ஐன்ஸ்டீன்- போஸ் புள்ளியல் கண்ட சத்தியேந்திர நாத் போஸ் என்ற பவூதிக பேராசிரியருக்கு தகுதி இருந்தும் அன்றைய விஞ்ஞானிகள் சிபாரிசு செய்தும் கொடுக்கப்படவில்லை. அவர் சொன்ன பதிலே பொறுத்தமாகும் நோபிள் பரிசு முக்கியமல்ல மக்களின் நெஞ்சங்களிலே வாழ்வது தான் முக்கியம் என்றார் . ஸ்டீபன் ஹாகிங்கை மானுடம் மறக்காது. நோபிள் பரிசு பெற்ற பலரை மக்கள் மறப்பர்

Meenatchi Sundaram

Leave a Reply

You must be logged in to post a comment.