திருப்பூர் மார்ச் 15-
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் பகுதியில் உள்ள காமாட்சி நகர் திருவண்ணாமலையை சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர். இவர்கள் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பூபாலன் பணிக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பூபாலனின் சகோதரர் ஜீவா புதனன்று இரவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது நதியா ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து திருப்பூர் வீரபாண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். மாலை 6 மணிவரை அக்கம்பக்கத்தினரோடு நதியா பேசிக்கொண்டிருந்ததாகவும், அதற்கு பின்னரே அவர் வீட்டிற்குள் சென்றதாகவும் அருகிருந்தவர்கள் தெரிவித்தனர். வீட்டில் இருந்தநகை, பணம் மற்றும் கைபேசி ஆகியவை காணவில்லை.இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .வீடுகள் அதிகமுள்ள பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: