ஈரோடு, மார்ச் 15-
விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதற்காக நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகாமையின் சார்பில் அந்தியூர் விதை ராகி போடப்பட்டுள்ளது.

அந்தியூர், அம்மாபேட்டை, நம்பியூர், தாளவாடி போன்ற பகுதிகளுக்கு அரசின் சார்பில் வழங்குவதற்காக ராகி விதைப்பண்ணை அந்தியூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் ராகி ஜிபியு 6 சிஎல் ராக விதைகள் போடப்பட்டுள்ளது. 1.60 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ராகி விதைப்பண்ணை சுமார் 2.5 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உற்பத்தி ரூ.1,44,000 ஆகும். இதில், கிலோவிற்கு ரூ.42.60 என சுமார் 1,06,500 கொள்முதல் விலையாகும். இதில் கிலோவிற்கு ரூ.15 என ரூ.37,500 வரை உற்பத்திக்கு மானியமாக வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டேர் ராகி பயிரிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது, 13 ஆயிரம் ஹெக்டேர் ராகி பயிரிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மலைப்பகுதியான தாளவாடிக்கு சுமார் 3.5 டன் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளுக்கு 2.5 வரை மானாவாரி பயிராக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.