தமிழக சட்டபேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டம் குறித்து, நிதித்துறை செயலாளர் க.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

மாநில அரசு, தற்போது சந்தித்து வரும் சவால்களை எதிர்கொண்டு கடன் சுமையை படிப்படியாக குறைக்கும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக உலக வங்கி, ஆசிய வங்கி நபார்டு, உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெறப்படுகிறது. இந்த துறைக்குதான், அதிக நிதி என்று கூறமுடியாது. அம்மா உணவகங்கள் நட்டத்தில் இயங்கி வருவது குறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாநில அரசு, அம்மா உணவகத்திற்கு, அரிசியை இலவசமாக வழங்குகிறது. பருப்பு, கோதுமை போன்ற பொருட்கள், பொது விநியோக திட்டத்தை போன்று அம்மா உணவகங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. துவக்கத்தில், லாபம் ஈட்டிவந்த அம்மா உணவகங்கள் தற்போது நட்டத்தை சந்தித்து வருவதாக அதை நடத்திவரும் உள்ளாட்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அது குறித்து தெளிவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஜிஎஸ்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிஎஸ்டி நடைமுறைபடுத்தியதால், சில சிக்கல்களும், பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து. தொழில் முதலீட்டாளர்களுடன், உரிய முறையில் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக் கப்படும். ஜி.எஸ்டி வந்த பிறகு, வரிவிதிக்கும் அதிகாரமும், வரியை குறைக் கும் அதிகாரமும் மாநில அரசிடம் இல்லை. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தான் உள்ளது என்றும் சண்முகம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: