கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் இரசாயனக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவின் ஆர்மேனியன் காட் அருகே இரசாயன கிட்டங்கியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 20 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Leave A Reply