“பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் தர வேண்டும் என்று மறைமுகமாக 

குறிப்பிட்டார் ரிசர்வ்வங்கி கவர்னர் உர்ஜித் படேல்” என்கிறது டிஒஐ ஏடு. வங்கி
களைக் கண்காணிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி தலைவரே இப்படிப் பேசுகிறார்
என்றால் ஊழல்களை வேண்டுமென்றேதான் அனுமதிக்கிறார்கள் என்பது
உறுதியாகிறது. ஊழல்களை நடக்கவிடுவது, அதையே காரணம்காட்டி வங்கி
களை தனியாரிடம் தருவது என்பதுதான் இவர்களின் திட்டம். ஊழல் செய்வதெ
ல்லாம் நீரவ் மோடி, விஜய் மல்லையா, கோத்தாரி போன்ற தனியார் பெருமுதலா
ளிகளே என்பதை உணராததுபோலப் பேசுகிறார். கொள்ளையை தடுக்க முடிய
வில்லை, ஆகவே வீட்டை கொள்ளையரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்கிறார்.
1969ல் வங்கிகளை அரசுடமையாக்கும் போது எந்த வலதுசாரி சக்திகள் அதை
கடுமையாக எதிர்த்தனவோ அவை இப்போது ஆட்சியாளர்களாகவும் அதிகாரி
களாகவும் வீற்றிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளைக் காக்கா விட்டால்
நமது பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது. அதற்காகிலும் மோடி அரசை
வீழ்த்தியே ஆக வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: