சட்டப்பேரவையில் வியாழனன்று (மார்ச் 15) காலை 10.30க்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை படிக்க துவங்கியுடன் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர் கள், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர், அவர்களை தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புறக்கணிப்பு ஏன்?

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கிய போது. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சிகள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்த போது எடுத்த படம்

பேரவையில் பட்ஜெட் உரையை புறக்கணித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் (திமுக), ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) ஆகியோர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, எடப்பாடி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட, எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

ஆகவே, இந்த பட்ஜெட் உரையை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தோம் என்றனர்.முன்னதாக, திமுக உறுப்பினர்கள் அனைவரும், கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். இது குறித்து, அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு உரிய வகையில், அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும், குதிரை பேர எடப்பாடி அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்ததாகக் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.