சேலம், மார்ச் 15-
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து சேலம் உருக்காலை கூட்டமைப்பினர் சார்பில் சேலம் உருக்காலை முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து, உருக்காலை தொழிலாளர்கள் கடந்த ஒருவருடமாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உருக்காலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும். மேலும், சேலம் உருக்காலை தனியார் மய நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகளை செயில் நிர்வாக இயக்குனர்கள் கூட்டம் வரும் மார்ச் மாதம் 28ம் தேதி டெல்லியில் முக்கிய முடிவு எடுக்கப்போவதாக இருந்த நிலையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆலையை செயல்படுத்திட இடு பொருட்கள் வழங்க வேண்டும். தனியார் மய முடிவினை கைவிடும் வரை பலகட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர். முன்னதாக சேலம் உருக்காலை முன் தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர் செல்வம், துணை அமைப்பாளர் தேவராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: