பொள்ளாச்சி, மார்ச் 15-
சிபிஎஸ்சி தேர்வில் இந்தியாவில் தாழ்ந்த சாதி எது? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது தமிழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தீண்டாமையை திணிக்கும் பார்ப்பணியத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் அனைத்து அரசியல்கட்சிகளின் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கல்வியை காவிமயமாக்கும் அனைத்து வேலைகளிலும் இறங்கியிருக்கிறது. அதில் வரலாறுகளை திரித்து இந்துத்துவா கருத்துகளை திணிப்பது, பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பார்ப்பணியம் மற்றும் பிரிவினையை துண்டும் இத்தகைய நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கழக மாநில வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமுஎகச மகேந்திரன், அபி அக்பர், விசிக மாவட்ட செயலாளர் ச.பிரபு, மஜக மாவட்ட செயலாளர் முஸ்தபா, திமுக தென்றல் செல்வராஜ், திருமலைராஜா, காங்கிரஸ் சார்பில் காளிமுத்து, திராவிடர் கழகம் புலவர் கடவுள் இல்லை ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வீரன், தமுமுக கபூர், மமக ஷேக் அப்துல்லா, முத்துபாய், எஸ்டிபிஐ. அக்பர் அலி, உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.