மனைவி மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர். தற்கொலை என நாடகமாடி கணவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் கிராமசாவடி தெருவில் வசித்துவருபவர் மாற்றுத்திறனாளியான சரவணன்(35). அவரதுமனைவி கனகா(27), மகள் கார்த்திகா (4) மற்றும் 8 மாத சிறு குழந்தை சிவசந்திரன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் புதனன்று (மார்ச் 14) அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கனகாவும், கைக்குழந்தை சிவசந்திரனும் மர்மான முறையில் தீயில் எரிந்த நிலையில் அலறித் துடித்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளோர் சென்று பார்த்தபோது அவர்களின் அறைமுழுவதும் எரிந்த நிலையில் இருவரும் கருகிக் கிடந்துள்ளனர்.

காவல் துறையினருக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குழந்தை சிவச்சந்திரன் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி கனகாவை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கனகாவும் மரணமடைந்தார்.இந்த நிலையில் கணவர்சரவணனை காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தான்தான் தனது மனைவி கனகாவையும் மகனையும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக சரவணன் கூறியதாக கள்ளக்குறிச்சி காவல்துறையினர் தெரிவித்தனர். கனகாவுடன் தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து 150 ரூபாய்க்கு முன்பே பெட்ரோல் வாங்கிவந்து வைத்திருந்ததாகவும், சம்பவத்தன்று இரவு வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கனகா மற்றும் குழந்தையின் அருகே சன்னல் வழியாகபெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு அவர்கள்அலறித் துடித்தபோது காப்பாற்ற முயற்சிப்பதுபோல் நடித்ததில் தனக்கும் சிறிய அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், குழந்தையுடன் கனகா தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் பரப்பி தான் aeதப்பிவிடலாம் என திட்டமிட்டதாகவும் சரவணன்வாக்குமூலம் அளித்துள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். கைக்குழந்தையுடன் மனைவியை கணவரேபெட்ரோல் ஊற்றி எரித்தசம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.