அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்க இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 87.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர், கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியான விண்ணப்பதாரர்களும் பயன்பெறும் வகையில் ஒருமுறை தீர்வாக பயனாளிகளின் எண்ணிக்கை 29.80 இலட்சமாக உயர்த்தப்படும்.

இத்திட்டத்திற்காக 3,881.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது.தொட்டில் குழந்தை திட்டம்’, ‘பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ. 140.50 கோடியும் அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.724 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கான ‘அம்மா இருசக்கர வாகன மானிய நிதியுதவித் திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டம்

43,143 சத்துணவு மையங்கள் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சத்துணவுத் திட்டத்திற்கு 1,747.72 கோடி ரூபாயும், ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம் பாட்டுத் திட்டத்திற்கு’ 2,146.30 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ‘ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், 100.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலத் துறைக்காக 5,611.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு

அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காகவும், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காகவும், பிரீமியத் தொகை செலுத்துவதற்காக, முறையே 260 கோடி ரூபாயும், 126.25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள் ளன. ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுகாலப் பலன்களுக்காக, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 25,362.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக 109.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் நகரும் வண்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்காக வரும் நிதியாண்டில் 13 கோடி ரூபாய் செலவில் மேலும் 2,000 பயனாளிகளுக்கு மோட் டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்க அனுமதி அளிக்கப்படும். மேலும் 2,000 மாற்றுத் திறனாளிகளுக்கு 12 கோடி ரூபாய் செலவில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க, அவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் விளிம்பு உதவித்தொகை 10,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படுவதோடு, தற்போது ஆண்டிற்கு 1,000 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்படுவதை இருமடங் காக உயர்த்தி, 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 545.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்குவதற்காக, மகளிர் விடுதி ஒன்று அரசு நிதியுதவியுடன் வரும் நிதியாண்டில் கட்டப்படும். வரும் நிதியாண்டில், சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 35 கோடி ரூபாய் கடனுதவியாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வழங்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.