கோவை;
மேட்டுப்பாளையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டநால்வருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவையை அடுத்த அவிநாசி, வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிஜந்தன் (25). பெரியம்மபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி (25). இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 18.8.2013 அன்று விடுமுறையை கொண்டாடுவதற்காக இருவரும் கல்லார் பழப்பண்ணையை சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்த இருவரையும், 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஒரு சவரன் தங்க சங்கிலி, அரை சவரன் மோதிரம், ஒரு செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பிசென்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதன்பின் கல்லார் ஆதிவாசி காலனியை சேர்ந்த நஞ்சன் (58), சிறுமுகை பெத்திக்குட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (44), ஊமப்பாளையம் மேலத்தெருவை சேர்ந்த சூம்பி என்கிற முனியப்பன் (38) மற்றும் முனியப்பன் (29) ஆகியோரை கைது செய்தனர். பின்பு கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழிப்பறி வழக்கு கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் நால்வர் மீதான வழிப்பறி குற்றம் நிருபிக்கப்பட்டது. இதையடுத்து நால்வருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மதுரசேகரன் தீர்ப்பளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: