சென்னை,
மாடியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாம்பலம் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி என்பவர் தனது குழந்தையுடன் துணி உலர வைக்க 2வது மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரியின் கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தை மித்ரன் தவறி விழுந்தான். இந்த விபத்தில் மித்ரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply