கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 7 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணி: Senior Assistant Engineer

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து 15 பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் ்ஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Mamager(HR)/T&BS, HLS&SCB SBU, Bharat Electronics Ltd, Jalahalli Post, Bangalore – 560018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/DocumentViews.aspx?fileName=advt_for_ex-servicemen_3%20years-english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: