தீக்கதிர்

நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்ததில் பெண் பலி

அரியலூர்,
செந்துறையில் நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் வயலில் அறுவடை இயந்திரத்தை இறக்கும்போது சாய்ந்து விழுந்தது. இதில் விவசாய தொழிலாளி அன்னக்கிளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பழனியம்மாள், அசலம்பாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.