கோவை:
கோவை மத்திபாளையம் அருகே உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள மத்திப்பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அரசாணிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் புதனன்று காலை காட்டுஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்தஅப்பகுதி விவசாயிகள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் செந்தில்குமார், வனவர் கண்ணன், வனகாப்பாளர் கர்ணன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தோட்டத்தில் அரசாணிக்காய் அதிக அளவில் பயரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இதனை சாப்பிடுவதற்காக காட்டு யானை வந்தபோது தான் யானை இறந்துள்ளது. இந்த தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது. எனவே மின்வேலியில் சிக்கியதால் யானை இறந்ததா? அல்லது நோய்வாய்பட்டு இறந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் வன மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.