சென்னை:
‘மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்’
உத்தரப்பிரதேச மாநில மக்களவை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. இதனையடுத்து பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘இடைத்
தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்’ என்றார்.

சென்னை:
குக்கர் சின்னத்துக்கு எதிராக
தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சி பெயரையும் தில்லி உயர் நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணையசட்ட விதிகளுக்கு எதிரானது என முதல்வர் தரப்பு மேல்
முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. குக்கர் சின்னம் தொடர்பாக தினகரன் சார்பில், ஏற்கனவே கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி:
டிரெக்கிங் செல்ல அனுமதி இல்லை!
‘நெல்லை மாவட்ட வனப் பகுதிக்குள் டிரெக்கிங் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. வனப்பகுதிக்குள் செல்வதற்கான விதிகள் கடுமையாக்கப்படும்’ என்று
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். குரங்கணி தீ விபத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மாலத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
வித்துள்ளது. குமரி கடல்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

புதுதில்லி:
மாநிலங்களவையில் இரங்கல்!
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் புதனன்று காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியப் பிரதமர், ஜனாதிபதி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு மாநிலங்களவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Leave A Reply