மதுரை:
தீக்கதிர் மதுரைப் பதிப்பு அலுவலகத்தில் பாது காவலராகப் பணியாற்றி வந்த மூத்த தோழர் ஆர்.சதாசிவம் காலமானார். அவருக்கு வயது 70.

புதனன்று பிற்பகல் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடி யாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 6 மணிக்கு காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தோழர் சதாசிவம், கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். மதுரை கோட்ஸ் தொழிலாளியாக பணியாற்றிய அவர், சிஐடியு சங்கத்தின் தீவிரமான உறுப்பினராக, முன்னணி ஊழியராக செயல்பட்டவர். தீக்கதிர் மதுரைப் பதிப்பு அலுவலக பாதுகாவலராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். மறைந்த சதாசிவத்திற்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி வியாழன் பகல் 12 மணிக்கு தீக்கதிர் அலுவலகம் எதிரில் உள்ள 29-சி, சி.ஏ.எஸ். காலனி, இரண்டாவது தெரு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.தோழர் சதாசிவம் மறைவுச் செய்தி அறிந்து தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் க.கனகராஜ், ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: