தாராபுரம்:
தாராபுரம் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி தடைபட்டுள்ளது.

தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாராபுரம் நகரில் உள்ள தாழ்வான பகுதிகளான தினசரி மார்க்கெட், பொள்ளாச்சி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிகிறது. இதற்கிடையே தாராபுரம் வட்டார பகுதிகளில் உள்ள பழைய மற்றும் புதிய அமராவதி பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்சமயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீரென பெய்த மழையால் கொளத்துப்பாளையம், அலங்கியம், செலாம்பாளையம், கோவிந்தாபுரம் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 40 சதவீத நெற்பயிர்கள் மழை நீரில் முழ்கியுள்ளது. இதனால் இயந்திரம் முலம் அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பெய்த மழையால் நெற்கதிர்கள் சாய்ந்து வயலில் விழுந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்புள்ளாகி உள்ளனர். இதேபோல், அறுவடை செய்யப்பட்ட நெல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அலங்கியம் மற்றும் கொளத்துப்பாளையம் நெல்கொள் முதல் நிலையம் என இரு பிரிவு அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படுகிறது. இருபாசன பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தினசரி சுமார் ஆயிரத்து 500 முட்டை நெல்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் கனம் மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் எடை போட இயலாமல் தார்ப்பாய் போட்டு முடி வைத்துள்ளனர். நுகர்பொருள் வாணிப கழக களத்தில் மழையின் காரணமாக மழை நீர் நெல் முட்டைகளின் அடிப்பகுதிகளில் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு முட்டைகளை பிரித்து பார்த்த பிறகே சேதம் எவ்வளவு என தெரியவரும். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Leave A Reply