கோவை;
சாதி உணர்வை உண்டாக்கும் வகையில் வினாத்தாளை தயார் செய்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டதை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு நடத்துகின்ற சிபிஎஸ்சி பள்ளிகளில் சாதி, மதம் வேறுபாடுகளை மாணவர்கள் மத்தியில் கற்பிக்கின்ற விதமாக பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிபிஎஸ்சி ஆறாம் வகுப்பு தேர்வில் சாதிய வேறுபாட்டை உண்டாக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சாதிய உணர்வை புகுத்தும் வகையிலும், தேச தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிபிஎஸ்சி பாடத்திட்டங்களை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து இஸ்லாமிய கட்சிகள் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தபெதிக பொதுச்செயலாளர்கு.ராமகிருட்டிணன், வி.சி.கட்சியின் இலக்கியன், ஆதித்தமிழர் கட்சியின் வெண்மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆறுச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் தீபக்சந்திரகாந்த் உள்ளிட்ட ஏரளமானோர் பங்கேற்று, சிபிஎஸ்சி நிர்வாகம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.