திருநெல்வேலி:
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல் கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மூட்டா செனட் தலைவர் சுப்பாராஜு, பொதுச் செயலாளர் நாகராஜன், பொரு
ளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக் கழக விதிகளின்படி ஆண்டுக்கு இரண்டு தடவை ஆட்சிப் பேரவை கூட்டம் நடத்த வேண்டும். ஆண்டின் 2ஆவது கூட்டத்தில் வருடாந்திர அறிக்கையை பேரவைமுன் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சிப் பேரவை நடத்தாமல் துணைவேந்தர் பாஸ்கர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை மேற்கொண்டுள்ளார்.

உறுப்பினர்களின்  செயல்பாடுகள் முடக்கம்
பல்கலைக்கழகம் ஆட்சிப் பேரவை தேர்தல் நடத்தி ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தேர்ந்தெ டுக்கப்பட்ட 45 பேரவை உறுப்பினர்களை 9ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிப் பேரவைக்கு அழைக்க வில்லை. அதற்குரிய காரணத்தையும் ஆட்சி பேரவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் 45 பேருடைய தேர்வு அரசு இதழிலும் பத்திரிகையிலும் பிரசுரிக்காத காரணத்தால் அவர்களை அங்கீகரிக்கவில்லை என்ற காரணத்தை நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தெரியப்படுத்தி உள்ளது.

அப்படியென்றால் எந்த இதழிலும் பிரசுரிக்காதகல்லூரி செயலாளர்கள் தரப்பில் பேரவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் கலைக்கல்லூரி செயலர் முகமது அலி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரியர் பிரிவிலிருந்து மாவட்டந் தோறும் ஒரு தலைமையாசிரியர் வீதம் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பட்டதாரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு ஆட்சிக்குழு உறுப் பினர்கள் மற்றும் இரண்டு கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் போன்றவர்கள் எவ்வாறு ஆட்சிப்பேரவையிலும், ஆட்சிக்குழுவிலும் செயல்பட முடிகிறது.

பல்கலைக்கழகம் தொடங்கியதிலிருந்து 27 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்
கணக்கான ஆட்சிப் பேரவை மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் தேர்வு எந்த இதழிலும், பத்திரிகையிலும் வெளியிடப்படவில்லை. இப்பல் கலைக்கழகத்தில் நடக்கும் விதி மீறல்கள், நிர் வாகச் சீர்கேடுகள், ஊழல் போன்றவற்றை கண்டி த்து ஆசிரியர்கள் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆகவே துணைவேந்தர் பாஸ்கர் தன்னுடைய நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தால் ஆட்சிப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாட்டை ஜனநாயக விரோதமாக முடக்கியுள்ளார்.

யுஜிசி விதிப்படி தகுதியில்லாதவர்
இப்பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள், கல்லூரி பேரா சிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் அனைவரும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு விதிகளின் படி பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கி வருகிறது. ஆனால் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிகள் 2010இன் படி தகுதியில்லாத கார ணத்தால் இவர் துணைவேந்தர் பதவிக்கு தகுதியற்றவர். ஆனால் அதிகாரம் மற்றும் பணபலத் தால் துணைவேந்தர் பதவியை பெற்றுள்ளார்.

பல்கலைக்கழக விதிமீறல்கள், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் புரிந்த குமரி மாவட்டத் தில் உள்ள இரண்டு கல்லூரிகளுக்கு புதிய பாடப்பிரிவுகள் தொடங்க பல்கலைக்கழக சின்டிகேட் அனுமதி வழங்கவில்லை. ஆனால் பாஸ்கர் துணைவேந்தராக பதவியேற்றவுடன் தன் சுயலாபத்திற்காக உயர்கல்வியின் மீது எந்த அக்கரையு மில்லாமல் அந்த இரு கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இப்படிப்பட்ட முறைகேடுகள் இதுவரையிலும் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரலாறு இல்லை.

சட்ட விரோத அனுமதி
மேலும் 2016ஆம் ஆண்டு தென்காசி பகுதியில் உள்ள நல்லமணி யாதவ் கல்லூரியில் புதியபாடப்பிரிவு தொடங்குவதற்காக பல்கலைக் கழகத்தில் இருந்து ஆய்வுக்குழு அனுப்பப்பட்டது. அக்குழுவில் உள்ள உறுப்பினர், பல்கலைக்கழக விதிகள் மற்றும் அரசு விதிகளின்படி ஆசிரியர், அலுவலருக்கு மாத ஊதியம் வங்கி மூலமாக வழங்கவில்லை, அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவில்லை, lC அனைத்து ஆசிரியர் களுக்கும் செலுத்தப்படவில்லை. மேலும் ஆ.இர்ம் மற்றும் ங.இர்ம் பாடம் நடத்தும் 13 ஆசிரி
யர்களில் 12பேர் தகுதியில்லாத ஆசிரியர்கள் ஆகிய காரணங்களால் இக்கல்லூரிக்கு புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கக் கூடாது என்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். ஆனால் துணைவேந்தர் பாஸ்கர் இந்த அறிக்கை யின் மீது நடவடிக்கை எடுக்காமல் வேறு ஒரு வரை வைத்து ஆய்வு செய்து அக்கல்லூரிக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளார்.

இதில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுபோல் திருநெல்வேலி யில் உள்ள ஒரு கல்லூரிக்கும் ஆய்வுக் குழு உறுப்பினர் அளித்துள்ள அறிக்கைக்கு எதிராக
அக்கல்லூரிக்கு புதிய பாடப் பிரிவு வழங்கப் பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் 2 முறை உயர்வு                                                                                                                                                 பாஸ்கர்  துணைவேந்தராக பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி யுள்ளார். இளங்கலை மாணவர்களுக்கு 55 ரூபாயிலிருந்து 110 ரூபாயாகவும் முதுகலை மாணவர் களுக்கு 75 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளார். தேர்வுத்துறையில் உபரியாக பணம் இருந்தபோதும் தேர்வுக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலைக் கழகங்களைவிட மிக அதிகமாக உள்ளது. உபரி பணத்தை மற்ற துறைகளுக்கு மாற்றி முறைகேடுகள் செய்ய பயன்படுத்துகிறார்.

மேலும் இது வரையிலும் இப்பல்கலைக் கழகத்தில் இல்லாத, ஆசிரியர் தகுதி ஒப்புதல்
கட்டணம் என்ற வகையில் ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களின் கட்டணத்தை யும் பலமடங்கு உயர்த்தியுள்ளார்.

அதிகாரம் ஆட்சிக்குழுவுக்கே
பாஸ்கர் துணைவேந்தராக பதவி ஏற்ற பின்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் தொடர்பான பேரங்கள் தொடங்கின. பல துறைகளுக்கு பேரங்கள் முடிந்த பின் நியமன நட வடிக்கையை மேற்கொண்டுள்ளார். பேராசிரியர் தேர்வுக்குழுவில் துணைவேந்தருக்கு வேண்டியவர்களை நியமித்து பேரம்பேசி முடித்தவர்களை மட்டும் தேர்வு செய்துள்ளார்.

பல்கலைக்கழக விதிகளின்படி பேராசிரி யர்களை நியமிக்கும் அதிகாரம் ஆட்சிக்குழுவிற்கு
தான் உள்ளது. 1-11-2016 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு சில ஆசிரியர்களை நியமிப்பதாக முடிவெடுத்துள்ளது. பல்கலைக்கழக விதி களின்படி ஆட்சிக்குழு, முடிவுகளை தயார்செய்து உறுப்பினர்களுக்கு அனுப்பி திருத்தம் பெற்று 10 நாட்களுக்கு பிறகு அங்கீகரிக்க வேண்டும். இந்த விதியை காற்றில் பறக்கவிட்டு 1-11-2016இல் ஆட்சிக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரி யர்களை 2-11-2016-ல் அவசர அவசரமாக பணியில் சேர்த்துள்ளார். ஒவ்வொரு பணி நியமனத் திற்கும் ரூ.35 லட்சத்திலிருந்து 65 லட்சம் வரையிலும் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இப்படி ஆசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.

ஆளுநருக்கு பலமுறை புகாரளித்தும் நடவடிக்கையில்லை
இவர் நியமித்துள்ள ஆசிரியர்களைவிட பல பேர் அதிக தகுதியிருந்தும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தகுதி இல்லாத நம்பகத்தன்மையற்ற சான்றிதழ் அடிப்படையில் பல துறைகளில் ஆசிரியர் நியமனம் நடைபெற்றுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இந்நாள்வரையிலும் எடுக்கப்படவில்லை.

யு.ஜி.சி விதிமுறைகள் 2009ன்படி கல்லூரி களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் மூன்று மாதத்
திற்குள் பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதி ஒப்புதல் பெற வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் ஆசிரியர்களாக கருதப்படுவார்கள். அவ்வாறு ஒப்புதல் பெறாத ஆசிரியர்கள் கல்லூரியில் பணியாற்ற முடியாது. சில ஊழல் கல்லூரி நிர்வாகங் களின் துணையோடும், ஒப்புதல் பெறாத ஆசிரியர்களை சேர்த்தும் ஆட்சிப்பேரவை தேர்தலை நடத்தி ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவிற்கு தன்னுடைய ஊழலுக்கு துணை செய்யும் நபர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் அடிப்படை யில் நீதிமன்றம் தடை ஆணையை வழங்கியுள்ளது.

விதிமீறல்கள்
தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக் கழகத்திலும், இல்லாத மிகப்பெரிய விதிமீறல் களை இப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பாஸ்கர் அரங்கேற்றியுள்ளார். பல்கலைக்கழக தேர்வுத்தாள் திருத்தும் பணியை பல்கலைக் கழக ஆட்சிக்குழு அங்கீகரித்துள்ள பட்டியலிலி ருந்து தேர்ந்தெடுத்த தேர்வாளர்களை நியமித்து நடத்த வேண்டும். ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக சில கல்லூரி முதல்வர் களுக்கு அப்பொறுப்பை வழங்கி தகுதியில்லாத ஆசிரியர்களைகொண்டு தேர்வுத்தாளை திருத்தும்பணி நடைபெற்றது. இதனால் ப ல மாணவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வ
தற்கான தேர்வுக்குழு பட்டியலில் இடம்பெறும் பல்கலைக்கழக பிரதிநிதிகளை நியமனம் செய்யும் விசயத்திலும் ஒரு ஆசிரியருக்கு ரூ. 1 லட்சம்முதல் 2 லட்சம் வரையிலும் பேரம்
நடத்தி பலகோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ள தாக பாஸ்கர் மீது நிர்வாகங்களின் புகார் எழுந்துள்ளது.

இந்த பிரச்சனைகள் தொடர்பான கேள்வி களையும் தீர்மானங்களையும் 9-3-2018 அன்று நடைபெற்ற ஆட்சிப்பேரவை கூட்டத்தில் முன்மொழிந்தோம். குறிப்பாக 2016-17 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களின் துறைவாரியான விபரங்கள், கல்வித்தகுதி, அனுபவம், பின்பற்றப்பட்ட இடஒதுக்கீடு முறை போன்ற கேள்வி களையும், துணைவேந்தரின் 2017ஆம் ஆண்டு முடிய வரைக்குமான காலத்தில் விமான பயணம் மேற்கொண்டதற்கான நோக்கம் அதற்காக பல்கலைக்கழகம் செலவிட்ட பணம் போன்ற  கேள்விகளையும் பேரவைக்கூட்ட பொருள் நிரலில் சேர்க்காமல் பல்கலைக்கழக
விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளார்.

பேரவைக்கூட்டத்தில் இவற்றை பற்றி வினவியபோது, இரண்டாவது கேள்விக்கு மட்டும் அரைகுறையான பதிலை அளித்து அராஜகமாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் நடந்து கொண்டார். மேலும் எழுப்பிய பல உயர்கல்வி பிரச்சனைகளில் சரியான விவாதங்கள் நடத்த அனுமதிக்காமல் உரிய விளக்கங்கள் அளிக்கப்படாமல் தனது ஊழல்கள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தால் மூட்டாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் களை பேசவிடாமல் தடுத்து ஜனநாயக மரபுகளை மீறி தேவையற்ற பிரச்சனைகளுக்கு காரணமாகியுள்ளார் துணைவேந்தர் பாஸ்கர். பல்கலைக்கழக கல்விச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசும், துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியக்குழுவும் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் மீது உரிய விசாரணைநடத்தி நட வடிக்கைஎடுக்கவேண்டும் என தெரிவித்தனர். பேட்டியின்போது செனட் உறுப்பினர்கள் மனோகர ஜஸ்டஸ், ரத்தின சிகாமணி, முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: