தாராபுரம், மார்ச் 14 –
தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் ஒன்றியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 6 மாத காலமாக 15 ஆம் தேதிக்கு பிறகே ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை முறையாக முதல் தேதியில் வழங்க வேண்டும். சமையல் உதவியாளரிடம் ஜிபிஎப் நெம்பர் வாங்குவதற்கு தலா ரூ.300 வசூலித்ததை திருப்பி வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆணையாளரிடமும், சத்துணவு மேலாளரிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைமையில் சத்துணவு ஊழியர்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆண்ருஸ்லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இப்போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் துரையன், ராமசாமி, சுமதி 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: