சென்னை:
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைத்தமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் ராஜூக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.மேலும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது. இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 8 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை புதனன்று (மார்ச் 14) விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஸ்குமார் அமர்வு, இதுதொடர்பாக உடுமலை காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.

மரண தண்டனையை உறுதி செய்ய அனுப்பி வைக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய
காவல்துறை அனுமதி பெற்றுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: