சென்னை:
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியான முகமது அன்சாரிக்கு 20 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14 ஆம் தேதி 11 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான முகமது அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில் 20 வருடமாக சிறையில் இருந்து வரும் அவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சம்சுனிசா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொ
ணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் தங்களின் மூத்த மகளான பாத்திமாவிற்கு ஏப்ரல் 17ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதால் கணவருக்கு 2 மாத காலம் பரோல் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சி.டி.செல்வம், என்.சதீஸ்குமார் அமர்வு , ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 20 நாட்கள் வரை பரோல் வழங்கி உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: