கோவை:
கோவையில் தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் புதனன்று சோதனை மேற்கொண்டனர்.

கோவை செல்வபுத்தில் வசித்து வருபவர் விமல். இவர் தங்க கட்டி வியாபாரம் செய்து வரும் இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் முதல் தளத்தில் ஸ்ரீநிதி கோல்ட் புல்லியன் என்ற அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை காலை விமல் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இரண்டு குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் 5 அதிகாரிகளும், வீட்டில் 3 அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நகை வியாபாரி விமல் தரப்பில் கூறுகையில், கோவையில் உள்ள கொசமட்டம் நிதி நிறுவன கிளைகளில் பண பரிவர்த்தனை செய்துள்ளேன். தற்போது, கோவையில் உள்ள கொசமட்டம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை ரயில் நிலையம், கவுண்டம்பாளையம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு ஆகிய இடங்களில் கொசமட்டம் நிதி நிறுவன கிளை உள்ளது. அங்குஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையொட்டியே தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் எந்த கால கட்டத்தில் எவ்வளவு பணம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர் என தெரிவித்தனர். இந்த சோதனை கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: