சென்னை:
குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதி காரி அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, அங்கு மலை யேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காக வும் சென்ற மாணவ, மாணவிகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.குரங்கணி மலைப்பகுதியில் வனத்துறையின் அனுமதியின்றி அவர்கள் மலையேற்றம் சென்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். மேலும், காட்டுத்தீ ஏற்பட்ட தற்கான காரணம் மற்றும் அனுமதி யின்றி அங்கு மலையேற்றம் செல்ல
காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரிக்க வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாள ரான ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கைல், “குரங்கணியில் காட்டுத்தீ ஏற்பட்ட தற்கான காரணம், மலையேற்றம் செல்வதற்காக வனத்துறை வகுத் துள்ள விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா, மலையேற்றம் செல்ல ஏற்பாடு செய்தவர்கள் ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளனரா என்பது குறித்து விசாரணை அதிகாரி விசாரிப்பார்.

வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற பரிந்துரை களையும் அவர் இரண்டு மாத காலத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
இதனிடையே குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குரங்கணியில் காட்டுத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு 11 பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர். தீக்காயமடைந்த 13 பேர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனை, கிரேஸ் கென்னட் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவ மனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒருவர் சென்னையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்களில் சிகிச்சை பலனின்றி மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு சொலவம்பாளையம் விஸ்வா கார்டனைச் சேர்ந்த லிபின் மகள் திவ்யா விஸ்வநாதன் புதனன்று மாலை காலமானார். இதையடுத்து குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: