பெங்களூரு:                                                                                                                                                                             இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த ஆஷிஷ் நெஹ்ரா கடந்த வருடம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும்(சர்வதேச போட்டிகள் உள்பட) ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் 11-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் நெஹ்ரா,ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல பந்துவீச்சாளர்களுக்கும் சிறப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என பொங்கியுள்ளார்.

இது குறித்து நெஹ்ரா கூறிய தாவது,”ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் ஒரு பேட்ஸ்மேன் 40 பந்தில் 120 ரன்களோ அல்லது 50 பந்தில் 130 ரன்கள் எடுத்தால் அது
பெரிய வரலாற்று சுவடாக ஊதித் தள்ளப்படுகிறது.அதே நேரத்தில் பந்து வீச்சாளர் நான்கு ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக் களை வீழ்த்தினால் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை.ஆனால் நான்கு ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தால் அதை விவாதப் பொருளாக வைத்து எண்ணெய் ஊற்றாமல் பொறித்து விடுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.பேட்ஸ்மேன்களை போல பந்துவீச்சாளர்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற முடியாது.

ஆனால் வெறும் 20 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெற்றி கிடைக்கும்.இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் மும்பை மைதானத்தில் பந்துவீசுவது கடினம் தான் என கருதுகிறேன்.அதற்கான தீவிர பயிற்சியில் எங்கள் அணி களமிறங்கியுள்ளது”
இவ்வாறு கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: