மும்பை:                                                                                                                                                                                        ஐபிஎல் டி-20 தொடரின் 11 சீசனுக்கான அதிகாரப்பூர்வ பாடலை பிசிசிஐ மற்றும் ஸ்டார் இந்தியா இணைந்து உருவாக்கியுள்ளது.BEST vs BEST என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ராஜீவ் வி.பல்லா இசையமைக்க,தென் ஆப்பிரிக்க திரைப்பட இயக்குனர் டான்மேஸ் இயக்க,சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார். தொலைக்காட்சி,வானொலி மற்றும் டிஜிட்டல் துறைக்கு ஏற்றவகையில் இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.ஐந்து மொழிகளிலும் சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார்.

ஐபிஎல் 11-வது சீசன் துவக்க விழா ஏப்ரல் 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.