துபாய்:
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் (ஐசிசி) வெளியிடப்படும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். ரபாடா 902 புள்ளிகளுடன் முத ல் இடத்திலும்,இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 887 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும்,இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 3-வது இடத்தில் உள்ளார்.அஸ்வின் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்மித் 943 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.விராட் கோலி 912 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோடி ரூட் 881 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.