மும்பை:
இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்
கத்தக்க நெடும்பயணத்தை ஒருபகுதி இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தபோதிலும் உலக ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளன. பிரிட்டனின் பிபிசி, அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்,டெய்லி மெயில், ஜப்பான் டைம்ஸ், சீன நாளிதழான சின்குவா உள்ளிட்டவை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.சிபிஎம் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் உரி
மைகளை வென்றெடுக்க இந்தியாவின் பொருளாதார தலைநகரத்தை முற்றுகையிட்டனர் என்பதாக கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாசிக்கிலிருந்து புறப்பட்டபயணம் தினமும் மக்கள் ஆதரவை பெற்று கடந்து வந்த விவரமான செய்தியை கார்டியன் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது பிபிசி. போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வென்றெடுத்துள்ள
கோரிக்கைகளையும் அது பட்டியலிட்டுள்ளது. பதினாயிரக்கணக்கில் விவசாயிகளும்,
பெண்களும் பங்கேற்ற நெடும்பயணம் மாபெரும் நிகழ்வு என்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் அனுபவித்துவரும் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செங்கொடியேந்தி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டம் என லத்தின் அமெரிக்க நாளிதழான டெலிஸுர்ட் குறிப்பிட்டுள்ளது. போராட்டத்தின் பல்வேறு புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கடும் வெயிலின் தாக்கத்தையும் தாங்கி பதினாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தியாவின் பொருளாதார தலைநகரை முற்றுகையிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளபோது, உதவாத அரசுக்கு எதிரான போராட்டம் எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: