தீக்கதிர்

இந்திய அஞ்சல் துறையில் 1058   பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…!

இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 1058 Gramin Dak Sevaks பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Gramin Dak Sevaks

காலியிடங்கள்: 1058

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்குதல் குறித்த 60 நாட்கள் கொண்ட சான்றிதழ் பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 09.03.2018 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினரும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2018
மேலும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://appost.in/gdsonline/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.